For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மார்க் ஷீட் டவுன்லோடு செய்ய..

Google Oneindia Tamil News

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஜூன் முதல் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களது பள்ளியிலும், இணையத்திலும் தெரிந்து கொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்திருந்தது.

Temporary mark sheet for SSLC students

அதன்படி, தேர்ச்சி பெற்ற அல்லது தவறிய மாணவர்கள் தங்களின் விடைத்தாளை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க மே 25 முதல் 28 வரை தங்களது பள்ளியிலேயே விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்ப கட்டணமாக மொழிப்பாடத்துக்கு ரூ. 305ம், மற்ற பாடங்களுக்கு ரூ. 205-ம் விண்ணப்பிக்கும் போது நேரில் செலுத்த வேண்டும்.

மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும் ஜூன் 1ம் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அன்றைய தினமே பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் அதனைப் பெறலாம்.

இணையம் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள், தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அத்துடன், மாணவர்கள் பள்ளிகளிலும்,தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றலாம்.

இதேபோல், தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது என்று அரசுத் தேர்வுகள் இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Tamilnadu examination department has said that the 10th standard students can get their temporary mark sheet through internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X