எங்களுக்கும் ஸ்டாலின் தான் தலைவர்! டக்குனு போய் பார்க்கலாம்! காங்கிரஸ் எம்.எல்.ஏ.பழனி நாடார் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: எங்களுக்கும் ஸ்டாலின் தான் தலைவர் என்று பேசி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் தென்காசி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்.

காங்கிரஸ் துண்டுடன் தாங்கள் நிற்பதை பார்த்தால், முதலமைச்சர் ஸ்டாலின் சீக்கிரம் தங்களை அழைத்து பார்ப்பார் என்றும் டக்குனு போய் முதல்வரை பார்க்கலாம் எனவும் பழனி நாடார் எம்.எல்.ஏ.

புதிய ரேஷன் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறினார்.

Tenkasi Congress Mla Palani Nadar has created a stir by saying that Stalin is our leader

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சுக்கு திமுகவினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர். மேலும், ராகுல்காந்தி விவகாரத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் தான் முதல் ஆளாக மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார் எனவும் பழனி நாடார் சுட்டிக்காட்டினார்.

கூட்டணியில் திமுகவை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமோ, பிரித்து பேச வேண்டும் என்ற விருப்பமோ தங்களுக்கு துளியும் இல்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் காரர்களுக்கும் ஸ்டாலின் தான் தலைவர் என பழனிநாடார் எம்.எல்.ஏ. பேசியிருப்பது காங்கிரஸ் வட்டராத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இதனிடையே தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதனும், பழனி நாடார் எம்.எல்.ஏ.வும் ஆரம்பத்தில் கீறியும் பாம்புமாக சண்டையிட்டு வந்த நிலையில் இப்போது ஒற்றுமையோடு செயல்பட்டு வருகிறார்கள்.

திமுக மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதனை மேடையில் வைத்துக் கொண்டு தான் ஸ்டாலின் தங்களுக்கும் தலைவர் எனப் பேசியிருக்கிறார் பழனி நாடார் எம்.எல்.ஏ.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவரே திமுக தலைவர் தான் தங்களுக்கும் தலைவர் என பேசி காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+