Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கோட்டையில்.. அசையாமல் ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்ற யானை.. கிட்ட போய் பார்த்தால்? தென்காசி ஆ

Subscribe to Oneindia Tamil

தென்காசி: யானையை நினைத்து கதிகலங்கி போயிருக்கிறார்கள் செங்கோட்டை மக்கள்.. என்ன நடந்தது யானைக்கு?
தற்போது தமிழ்நாடு பூராவுமே வெயில் கொளுத்தி வருகிறது.. மக்களால் கொஞ்சம்கூட சமாளிக்க முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.. அதேபோல, தமிழக வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.. இதனால் தண்ணீர் தேடியும், வெப்பம் தாங்காமல் நீர்நிலைகளை நாடியும் வருகின்றன.

மலையடிவாரம்: அந்தவகையில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதியில், வெப்பம் மண்டையை பிளந்து கொண்டிருப்பதால் அங்குள்ள விலங்குகளும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன..

Tenkasi incident and Do you know Did Elephant go to Sengottai what happened Shenkottai

இந்நிலையில், செங்கோட்டை புளியரை பகவதிபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஒரு யானை வந்துள்ளது.. இங்கு கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது.. தோப்பு இருப்பதால், பம்பு செட்டையும் கிருஷ்ணன் அமைத்திருக்கிறார்.. இந்த பம்ப் செட்டில் தண்ணீர் இருக்கும் என்று நினைத்து, 25 வயதுடைய ஆண் யானை வந்துள்ளது.

தோப்பு குளுகுளு: இந்த தோப்பு குளுகுளுவென இருக்கவும், யானை அங்கிருந்து திரும்பி செல்லலாமல், தோப்புக்குள்ளேயே முகாமிட்டுவிட்டது.. இதைப் பார்த்த விவசாயிகள் உடனே வனத்துறைக்கு தகவல் சொன்னார்கள்.. வனத்துறையினரும், விவசாயிகளும் சேர்ந்து யானையை விரட்ட முயன்றனர்.. ஆனால், காட்டு யானை அசையவே இல்லை.. அங்கேயே ஒரே இடத்தில் நகராமல் நின்றது.. அதுவும் 8 மணி நேரமாக ஒரே இடத்தில் யானை அசையமல் நிற்கவும், வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள்.

ஒருவேளை யானைக்கு உடல்நிலை பாதிப்பு ஏதாவது இருக்கிறதா? என்று சந்தேகப்பட்டனர்.. அதனால், உடனடியாக மருத்துவரையும் வரவழைத்தனர்.. டாக்டர் மனோகரன் அந்த யானையை பரிசோதனை செய்தார்..

பரிதாபம்: அப்போதுதான் அந்த யானைக்கு வாய்ப்பகுதிய்ல பெரிய புண் இருப்பதை கவனித்தார்.. வாயில் கட்டி வந்துள்ளதால், அந்த யானையால் சாப்பிட முடியவில்லை.. தண்ணீரும் குடிக்க முடியவில்லை.. இதனால், பசியால், வறட்சியாலும், வாய்ப்புண்ணாலும் அவதிப்பட்டு வலியால் இந்த தோப்புக்கு ஓடிவந்துள்ளது தெரியவந்தது..

அதற்கு பிறகு, யானைக்கு சத்து மாவு, சாப்பாடு, தண்ணீரை டாக்டர் மனோகரன் வழங்கினார். ஆனாலும் யானையால், கொஞ்சம்கூட தண்ணீரை குடிக்க முடியவில்லை.. அதேபோல அசையாமலேயே ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.

டாக்டர்: இதனால் வேறுவழியின்றி யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார் டாக்டர் மனோகரன்.. யானையால் இயல்பு நிலைக்கு வராத சூழலில், வனத்துறையினரும் இரவெல்லாம் மாந்தோப்பிலேயே யானைக்கு பக்கத்திலேயே இருந்தனர்.. ஆனால், அசையாமல் நின்றிருந்த அந்த யானை, நள்ளிரவில் அப்படியே இறந்தே விட்டது.. இதையடுத்து யானைக்கு போஸ்ட் மாட்டம் அதே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. வாயில் யானைக்கு புண் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை..

விளைநிலங்களில் புகுந்து, விவசாய பொருட்களை விலங்குகள் சேதம் செய்வதால், இதை தடுப்பதற்காக சிலர், உணவுப்பொருளில் சிலர் வெடிமருந்து கலந்து வைத்து விடுகிறார்கள்.. உணவு என்று நினைத்து ஆசை ஆசையாக பசியில் ஓடிப்போய் வாயில் அந்த உணவை கடிக்கும்போது, வெடிகுண்டு வெடித்து, அந்த விலங்குகளின் வாய்ப்பகுதியும் வெடித்து சிதறுகிறது.

கொடுமை: அதுபோல, இந்த யானைக்கும யாராவது வெடி வைத்துவிட்டார்களா? அல்லது எதனால் புண் ஏற்பட்டது என்று தெரியவில்லை... எத்தனை நாட்களாக வாயில் புண் இருந்து வந்தது? வலியால் எத்தனை நாள் அவதிப்பட்டதோ தெரியவில்லை.. ஆனால், பசியிலேயே அந்த பாழும் உயிர் பிரிந்துவிட்டது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+