வில்லங்க செயலியில் ராத்திரி கூப்பிட்ட இளைஞர்கள்.. சபலப்பட்ட தென்காசி நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தென்காசி: ஆன்லைன் செயலியில் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து அவ்வப்போது மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவரை குரூப்பாக கூப்பிட்ட இளைஞர்கள் சிலர் அர்த்த ராத்திரியில் தனிமையான இடத்திற்கு வர வைத்து சரமாரியாக அடித்து தாக்கி வெள்ளி செயின், செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூரை சேர்ந்த 24 வயது வாலிபருக்கு ஆன்லைன் செயலி மூலமாக முகம்மது காதி என்பவரது அறிமுகம் கிடைத்தது. முகம்மது காதி தனது நண்பர்கள் சிலரையும் வாலிபருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஆன்லைன் செயலி
கடந்த சில நாட்களாக காதி மற்றும் அவரது நண்பர்கள் ஆசை காட்டி ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். இதை முதலில் தட்டி கழித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வாலிபர்கள் பேசியதை கேட்டு சங்கரன்கோவில் பொதிகை நகருக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபருடன் சேர்ந்து முகம்மது காதி மற்றும் அவருடன் வந்த சிறூவர்கள் உள்பட 5 பேரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் 24 வயது வாலிபரை மற்ற 6 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த வெள்ளி செயின், செல்போனை பறித்தனர். கடும் வாக்குவாதம் செய்து தாக்குதல் நடத்தியதால் அந்த சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். இதைப் பார்த்ததும் சிறுவர்கள், வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
எனினும் 2 பேரை பொதுமக்கள் பிடித்துக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் 2 பேரையும் போலீசாரிடம் பிடித்து கொடுத்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த 24 வயது வாலிபர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குருவிகுளம் போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடியவர்கள் புளியங்குடி மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மற்றும் மனோ (19) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருவிகுளம் அருகே ஓரினச்சேர்க்கை ஆசைகாட்டி வாலிபர் ஒருவரை காட்டுப்பகுதிக்கு அழைத்து தாக்கியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே பாணியில் மீண்டும் ஒரு ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி செயின், செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications