தென்காசியில் 4 சவரன் தங்க நகையுடன் குளியலறைக்கு போன முருகசெல்வி.. திகைத்து நின்ற சேர்ந்தமங்கலம்
தென்காசி: தங்க நகை விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும்நிலையில், தங்க நகைகளின் திருட்டு, கொள்ளை சம்பவங்களும் பெருகி வருகின்றன.. இது தொடர்பான நடக்கும் குற்றங்களும் அதிகரித்திருப்பது பொதுமக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது. நேற்றைய தினம்தான் குன்னூரில் ஒரு கொலைக்குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது.. அதற்குள் தென்காசியில் ஒரு கொலை, தங்க நகைக்காக நடந்துள்ளது.
குன்னூர் உபதலை ஆலோரை பகுதியை சேர்ந்த மோசஸ் மனோகரன் மற்றும் ஜோதிமணி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 13 மற்றும் 8 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த நிர்மலா எஸ்தர், ஜோதிமணியின் நெருங்கிய தோழியாக இருந்து வந்துள்ளார். குடும்பச் செலவுகளுக்காக நிர்மலா எஸ்தர் அடிக்கடி ஜோதிமணியிடம் கடன் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
தங்கம் நகைகள்

இந்நிலையில், நிர்மலா எஸ்தரின் கணவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். மருத்துவ செலவுகள் காரணமாக குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இதனால் தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடகு வைத்து கடன் பெற்றார். ஆனால் கடன் தவணையை செலுத்த முடியாமல் போனது. இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு வந்து தவணை தொகையை கேட்டு அழுத்தம் கொடுத்தனர்.
இந்த பிரச்னையை சமாளிக்க, நிர்மலா எஸ்தர் மீண்டும் ஜோதிமணியிடம் பணம் கேட்க முடிவு செய்தார். 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி அவர் ஜோதிமணியை சந்தித்து கடன் கேட்டார். ஆனால் ஜோதிமணி பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜோதிமணியின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
ஊட்டி கோர்ட் தந்த தண்டனை
இதற்காக நிர்மலா எஸ்தர் தனது மாமனார் மணி (75) என்பவரை உதவிக்கு அழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து ஜோதிமணியை தரையில் தள்ளினர். இதில் அவர் தலையில் காயம் அடைந்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்த சேலையை எடுத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நீண்ட நேரமாகியும் ஜோதிமணி வீட்டிற்கு திரும்பாததால், அவரது கணவர் மோசஸ் மனோகரன் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய அருவங்காடு போலீசார், நிர்மலா எஸ்தர் மற்றும் அவரது மாமனார் மணி ஆகியோர் நகைக்காக ஜோதிமணியை கொலை செய்து உடலை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் முடிவில், நேற்று நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில் நிர்மலா எஸ்தருக்கு ஆயுள் தண்டனையும், அவரது மாமனார் மணிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பின் அதிர்வலைகள் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாகவே இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. இதுவும் நகைக்காக நடந்த கொலைதான்.
தென்காசி 4 சவரன் தங்க நகை
தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள அருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யங்கண்ணு. அவரது மனைவி முருகசெல்வி.. 42 வயதாகிறது... அய்யங்கண்ணு வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், முருகசெல்வி தனது 12 வயது மகளுடன் வீட்டில் வசித்து வந்தார்.
வழக்கமாக மார்கழி மாதத்தில் அவர் அதிகாலை 4.30 மணிக்கு கோவிலுக்கு சென்று பூஜை செய்வாராம்.. ஆனால் நேற்று அதிகாலை வழக்கமான நேரத்திலும் முருகசெல்வி வீட்டை விட்டு வெளியே வராததால், அப்பகுதியில் வசிக்கும் உறவினர்கள் சந்தேகமடைந்தனர். அதனால் அவர்கள் முருகசெல்வியின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர்..
குளியலறையில் முருகசெல்வி
அப்போது வீட்டின் குளியலறையில், ரத்த வெள்ளத்தில் முருகசெல்வி உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், முருகசெல்வி அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. மேலும், அவரது கழுத்து பகுதியில் வெட்டுக் காயங்கள் இருந்ததால், நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
பால் வியாபாரி வாக்குமூலம்
இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மோப்ப நாய்களின் உதவியுடன் கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், வடநத்தம்பட்டியைச் சேர்ந்த \ஹசரத் (24) என்பவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பால் வியாபாரியான சரத், லாரி வாங்கி தொழில் செய்யலாம் என்று நினைத்தாராம்.. அதற்கு பணம் இல்லாததாலேயே நகையை திருடி கொன்றதாக போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.. இப்போது அந்த 4 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications