முகப்பேர் அருகே பால்கனி இடிந்து விபத்து: பேத்தியை காப்பாற்றி உயிரைவிட்ட பாட்டி.. தாத்தாவும் பலி!
சென்னை முகப்பேரில் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் ஏற்கனவே ஒருவர் பலியான நிலையில் இன்று மற்றொருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்தவர் நடராஜன் 55. இவரது மனைவி லட்சுமி 48. இருவருமே பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தமிழ்ச்செல்வி, சுகன்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடந்தாகிவிட்டது. இதில் சுகன்யாவுக்கு ரக்ஷனா என்ற கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி வீட்டின் லட்சுமி தனது வீட்டின் முதல்மாடியில், தனது கணவர் நடராஜடனுடன் பேசியபடி, குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு லட்சுமி பூ கட்டிக் கொண்டிருந்தார். அப்போது மராமரத்து வேலைகள் நடைபெற்று வரும் இரண்டாவது மாடியில் உள்ள பால்கனி திடீரென இடிந்து விழுந்தது.
ஆபத்தை உணர்ந்த லட்சுமி சுதாரித்து, பேத்தியை இறுக்கி குனிந்து அணைத்துக் கொண்டார். இதில் அனைத்து இடிபாடுகளும் லட்சுமி மேல் விழுந்தது. எனினும் இடிபாடு விழுந்த வேகத்தில் 3 பேருமே கீழே விழுந்தனர். இதில் பேத்தியை கடைசி நிமிடம் வரை கட்டி அணைத்து காப்பாற்றிய லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடராஜனுக்கு கால் முறிந்ததுடன் பலத்த காயம் ஏற்பட்டது. பாட்டி காப்பாற்றியதால், குழந்தைக்கு லேசான காயமே ஏற்பட்டது.
உடனடியாக நடராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தனது மகளை காப்பாற்றிய அம்மாவின் உடலை கண்டு மகள் சுகன்யா கதறி கதறி அழுதார். இந்த விபத்து குறித்து நொளம்பூர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜன் இன்று காலை உயிரிந்துள்ளார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதால் சுகன்யாவின் குடும்பம் மேலும் ஒரு இன்னலில் சிக்கியுள்ளது அப்பகுதி மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications