அதிமுக செயற்குழு கூட்டம் 'தவிர்க்க முடியாத காரணங்களால்' ஒத்திவைப்பு
Recommended Video

சென்னை: வரும் 20ம் தேதி நடைபெறவிருந்த, அதிமுக செயற்குழு 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுக செயற்குழு 20ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது.

திமுகவுக்குள் அழகிரி பேட்டியால் ஏற்பட்ட பதற்றம், டிடிவி தினகரன் எழுச்சி, ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சி சட்டவிதிகளில் திருத்தம் ஏற்படுத்தியது செல்லாது என்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். 4 வாரத்திற்குள் இதை முடிவுக்கு கொண்டுவர தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இறுதிக்கட்ட விசாரணை நடந்துக்கொண்டு வருகிறது. இதனிடையேதான் செயற்குழு கூட்டத்திற்கு அதிமுக தலைமை அழைப்புவிடுத்திருந்தது.
இந்த நிலையில், 20ம் நடைபெறுவதாக இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வரும் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே அனுப்பட்ட, அழைப்பிதழுடன் பங்கேற்க வேண்டும். ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெறும்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications