அமமுக தான் டாப்பு.. அதிமுக டூப்பு.. பாட்டாவே பாடிட்டாரே தங்க தமிழ்செல்வன்!
அமமுகதான் வெற்றி பெறும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை: திருவாருர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு பிறகு அமமுக தான் டாப்பு, அதிமுக ஒரு டூப்பு என்பது தெரியவரும் என்று தினகரன் ஆதரவாளர் தங்க. தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தது தவறு என்று உணர்ந்ததால் மன்னிப்பு கேட்டேன். தற்போது 3-வது நீதிபதி முன்பு விசாரணை நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை. சாதகமான தீர்ப்பு வந்த பிறகு ஆட்சியை கலைக்காமல் புதிய முதலமைச்சர் நியமனம் செய்யப்பட்டு ஆட்சி தொடரும்.

திருவாருர் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும். அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அமமுக தான் வெற்றி பெறும். அப்போது அமமுக-தான் டாப்பு. அதிமுக டூப்பு என்பது தெரியவரும். அதன் பின்னர் ஆட்சியையும் கட்சியையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அதிமுக நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. ஆனால் கருணாநிதி இறந்த பிறகு அண்ணா சமாதியில் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு அதிமுக மேல்முறையீடு செய்யாதது ஏன்? இதிலிருந்து திமுக, அதிமுக கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தெரியவருகிறது. அதேபோல, சமீபகாலமாக பாஜகவோடு திமுக நெருங்கி வருகிறது.
இவ்வாறு தங்க.தமிழ்ச்செல்வன் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications