தாலி கட்டி 15 நாள்தான் ஆச்சு.. மனைவிக்கு குவா குவா.. அலறி ஓடிய புது மாப்பிள்ளை
திருமணம் முடிந்து 15 நாளில் மணப்பெண் குழந்தை பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

ஊத்தங்கரை: திருமணமான 15 நாளிலேயே புதுப்பொண்ணுக்கு குழந்தை பிறந்ததால், மாப்பிள்ளை அலறி அடித்து கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊத்தங்கரை அருகே வசித்து வருபவர் அஜிஸ். இவருக்கும் பர்வீன் பானு என்பவருக்கும் 15 நாளுக்கு முன்னாடிதான் கல்யாணம் நடைபெற்றது. பர்வீன் பானு தர்மபுரியை சேர்ந்தவர். இரு வீட்டு நபர்கள் மற்றும் பொண்ணு, மாப்பிள்ளை சம்மதத்துடன்தான் திருமணம் நடைபெற்றது.

யாருடனும் பேசவில்லை
கல்யாணம் முடிஞ்சு அஜீஸ் வீட்டுக்கு வந்த பர்வீன் பானுவின் முகத்தில் சந்தோஷ களையே இல்லை. அதோடு கல்யாணம் முடித்த மறுநாளிலிருந்தே வயிற்று, வயிற்று வலி என்று சொல்லியே வந்திருக்கிறார் பர்வீன். இதனால் 15 நாளாக யாருடனும் சரியாக பேசக்கூட இல்லையாம். கல்யாணம் முடிஞ்சு அஜீஸ் வீட்டுக்கு வந்த பர்வீன் பானுவின் முகத்தில் சந்தோஷ களையே இல்லை. அதோடு கல்யாணம் முடித்த மறுநாளிலிருந்தே வயிற்று, வயிற்று வலி என்று சொல்லியே வந்திருக்கிறார் பர்வீன். இதனால் 15 நாளாக யாருடனும் சரியாக பேசக்கூட இல்லையாம்.

நிறைமாத கர்ப்பம்
இந்த நிலையில் நேற்று இரவு பர்வீனுக்கு வயிற்று வலி அதிகமாகவிட்டது. இதனால் பதறிப்போன மாப்பிள்ளை மனைவியை அழைத்து கொண்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனயில் கொண்டு போய் சேர்த்தார். அப்போது பர்வீனை செக்கப் செய்த டாக்டர்கள், நிறைமாத கர்ப்பம் என்ற ஒரு குண்டை தூக்கி புது மாப்பிள்ளை தலையில் போட்டார்கள். அதோடு, 'கொஞ்சம் நேரம் இருங்க. குழந்தை பிறந்துடும்' என்றார்கள்.

அழகான ஆண் குழந்தை
இதைக் கேட்டதும் அலறி அடித்து கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே தலைதெறிக்க ஓடிவந்தார் மாப்பிள்ளை. பின்னர் பர்வீனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த குழந்தையை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறையிலேயே கொல்லவும் பர்வீன் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

மாப்பிள்ளை எங்கே?
இறுதியாக குழந்தை மருத்துவமனை நிர்வாகம் பிறப்பு பதிவு சான்றிதழை தயார் செய்ய முனைந்தனர். அதற்காக பெண்ணின் கணவரை ஆஸ்பத்திரி முழுக்க தேடினர். மாப்பிள்ளையை எங்கயும் காணோம். அதனால், பர்வீனின் உறவினர்களை அழைத்து மருத்துவமனை தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதனிடையே பதறியடித்து ஓடிபோன மாப்பிள்ளை போலீசில் புகார் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications