கூடங்குளம் 2வது அணு உலையில் மே முதல் உற்பத்தி தொடங்கும் - வளாக இயக்குநர் தகவல்
நெல்லை:கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அணு உலையில் மே மாதம் முதல் உற்பத்தி தொடங்கும் என கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.
இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்காக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது ஒப்புதல் அளித்தவுடன் மே மாதத்தில் மின் உற்பத்தி துவங்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், 3 வது மற்றும் 4 வது அணு உலைகளை அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் சுந்தர் தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications