கிராமப்புற மக்களோடு பின்னிபிணைந்த கூம்புவடிவ ஸ்பீக்கர்! இனி பார்க்க முடியாதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிராமப்புறங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதலில் முன்னுரிமை அளிக்கப்படுவது கூம்பு வடிவ ஸ்பீக்கருக்குதான்.

வீட்டின் முன்பகுதியில் இரண்டு புறமும் கூம்பு வடிவ ஸ்பீக்கரை கட்டிவிட்ட இரவு பகலாக பாடல்களை ஒலி பரப்பிக் கொண்டே இருப்பார்கள்.

கூம்பு வடிவ ஸ்பீக்கர்

கூம்பு வடிவ ஸ்பீக்கர்

காது குத்து முதல் கல்யாணம் வரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கூம்பு வடிவ ஸ்பீக்கருக்கு தனி இடம் உண்டு.

மக்களை எழுப்பி விடும்

மக்களை எழுப்பி விடும்

இதேபோல் கோவில் திருவிழாக்கள் என்றாலும் கூம்பு வடிவ ஸ்பீக்கர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். திருவிழா நாட்களில் மக்களை எழுப்பி விடுவதே இந்த ஒலிப்பெருக்கிகள் தான்.

ஊர் முழுவதும்

ஊர் முழுவதும்

தெருக்களுக்கு தெரு ஊர் முழுவதும் ஒவ்வொரு கார்னர்களிலும் இந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்டிருக்கும். சீரியல் லைட்டும் இந்த ஸ்பீக்கர்களும் கட்டப்பட்டதால்தான் திருவிழாவே களைகட்டும்.

தலைவலிதான்

தலைவலிதான்

இந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பெருக்கும் சத்தத்தால் பள்ளிகளுக்கும் நோயாளிகளுக்கும் தலைவலிதான் என்றாலும் பலருக்கு இந்த ஸ்பீக்கர்கள் உற்சாகத்தைதான் அளிக்கும்.

ஹைகோர்ட் கிளை

ஹைகோர்ட் கிளை

இந்நிலையில் இந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது. நோயாளிகள் பள்ளிக்குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு தொடரப்பட்ட பொது நலவழக்கில் ஹைகோர்ட் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சத்தமாக இசையை ரசிக்கும்

சத்தமாக இசையை ரசிக்கும்

கிராமப்புற மக்களின் நல்லது கெட்டதுகளில் இரண்டறக் கலந்த இந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சத்தமாக இசையை ரசிக்கும் பலருக்கு நிச்சயம் வருத்தத்தை தரும்.

நிச்சயம் மிஸ் பண்ணுவோம்

நிச்சயம் மிஸ் பண்ணுவோம்

இதேபோல் பெரிய ஸ்பீக்கர்களுக்கும் ஹைகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி மற்றும் பெரிய ஸ்பீக்கர்கள் இல்லாமல் ஆடி மற்றும் சித்திரை மாதங்களில் அம்மன் கோவில் திருவிழாக்கள் நிச்சயம் எதையோ இழந்ததை போலவே இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Madurai High Court bench has banned the use of cone-shaped speakers and large speakers in Tamil Nadu. A person named Jayaraman filed a petition againsed cone shaped speakers. Village people will miss the cone shaped speakers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற