உறுப்புகள் திருட்டு.. உடல்கள் கடத்தல்.. என்ன நடக்கிறது முதியோர் இல்லங்களில்?
Recommended Video

காஞ்சிபுரம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு கடந்த 3 மாதத்தில் 300க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் மரணம் மர்மமாக இருப்பதாகவும் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

அடைக்கப்பட்டுள்ளனர்
மேலும் சாலையோரங்களில் பரிதவிக்கும் முதியவர்களை அந்த கருணை இல்லம் கடத்தி வந்து அடைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏராளமான ஆண் பெண் முதியவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் திடீர் திடீரென மரணமடைந்து வருகின்றனர்.

சராசரியாக 3 பேர் மரணம்
நாள்தோறும் சராசரியாக 2 பேர் மரணமடைவதாக கருணை இல்லத்தின் நிர்வாகி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கடந்த 3 மாதத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உறுப்புகள் திருட்டு
மேலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முதியவர்களின் உறுப்புகள் கடத்தப்படுவதாகவும், அவர்களின் உடல் அழுகிய பிறகு எழும்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கொலையா?
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முதியவர்கள் இயற்கை மரணமடைகின்றனரா அல்லது அவர்களின் எலும்புகளுக்காக கொல்லப்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் நோட்டிஸ்
இதைத்தொடர்ந்து அந்த சர்ச்சைக்குரிய கருணை இல்லத்தில் காவல்துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட நிர்வாகமும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

என்ன நடக்கிறது?
தமிழகம் முழுவதும் ஏராளமான முதியோர் இல்லங்கள் உள்ள நிலையில் அங்கெல்லாம் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஆதரவு இன்றி தவிக்கும் பலரும் நம்பி போய் சிக்கிகொள்கின்றனர்.

கைவிடும் மனநிலை
ஆனால் எலும்பு மற்றும் உறுப்புகளுக்காக முதியோர்கள் கொல்லப்படுவது மக்களை அதிர வைத்துள்ளது. முதியோரைக் கைவிடும் மன நிலை மாறாத வரை இதுபோன்ற காப்பக கொடுமைகளும் தொடர் கதையாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications