நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒடிசா அருகே வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

The storm warning cage lodged in Nagapattinam, Cuddalore and Puduchery ports

கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக தேவாலாவில் 4 சென்டிமீட்டர் மழையும், நடுவட்டம், வால்பாறையில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இதனிடையே ஒடிசா அருகே வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களாக நாகை, கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Chennai-Mangalore express derails at Cuddalore, 38 injured

இதேபோல் சென்னை எண்ணூர், தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்ரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The storm warning cage lodged in Nagapattinam, Cuddalore and Puduchery ports. The warning cage has been lodged due to the cyclone in the Bay of Bengal near Odisa.
Please Wait while comments are loading...