ஆடு பகை.. குட்டி உறவு.. ரயில் நிலைய விழாவில் சிரித்து பேசிய இரு அணி அதிமுக எம்.பி.க்கள்!
ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னர் இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக எம்.பி.க்கள் சென்னையில் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு விழாவில் மோதலை மறந்து கைகுலுக்கி பேசி கொண்டிருந்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னர் இரு அணிகளாக செயல்பட்டு வந்த எம்.பி.க்கள் சென்னை ரயில் நிலைய விழாவில் கை குலுக்கி பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கான இலவச ஒய்ஃபை மற்றும் நடைமேடைகள் தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இன்று காலை தொடங்கின.

இந்நிகழ்ச்சியில் பிளாட்பாரம் தொடங்குதல் மற்றும் பல்வேறு திட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார். இதில் தமிழக எம்பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இரு அணியினரும் ஒன்றாகவே செயல்பட்டனர்.
ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மைத்ரேயனும், சசிகலா தரப்பைச் சேர்ந்த ஜெயவர்தனும், நவநீதகிருஷ்ணனும் அருகருகே அமர்ந்து கொண்டு கைகுலுக்கி சிரித்து பேசி மகிழ்ந்தனர். இது ஆரோக்கியமான அரசியல் என்றாலும் பார்ப்பவர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications