உச்சந்தலையில் ஏறிய போதை.. நண்பனை கிணற்றில் தள்ளி விட்டு விளையாட்டு.. பறி போன உயிர்!
Recommended Video

வேலூர்: உச்சி மண்டைக்கேறிய போதை, தன் உயிர் நண்பனை கிணற்றிலே பிடித்து தள்ளி உயிரையே இழக்க செய்துவிட்டது. இந்த செய்தி வேலூர் மாவட்டம் இல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
வாணியம்பாடி அருகே உள்ள கிராமம் சம்மந்திகுப்பத்தை சேர்ந்தவர் மவீன் என்னும் இளைஞர். இவர் பெங்களூருவில் கார்பென்டராக வேலை பார்க்கிறார். நேற்று லீவு என்பதால் ஊருக்கு வந்துள்ளார். அப்போது தன் உயிர் நண்பர்களான அருண் குமார், பவீத், ராகுல், சுதர்சன், கல்யாண குமார், அஜித் குமார் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். பிறகு நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடிப்பதற்காக தோப்பு பக்கம் சென்றார்.

மவீனை காணவில்லை
எல்லோருமே ஒன்றாக உட்கார்ந்து போதை தலைக்கேறும்வரை மது அருந்தினார்கள். நேரம் ஆகிவிட்டதால் அவரவர்கள் வீட்டுக்கு கிளம்பி சென்றுள்ளனர். ஆனால் மவீன் மட்டும் நேற்றிரவு வீட்டுக்கு வரவேயில்லை. அவரது குடும்பத்தார் எங்கெங்கோ தேடி பார்த்தார்கள். மவீன் கிடைக்கவே இல்லை.
இந்நிலையில் இன்று காலை நண்பர்கள் தண்ணி அடித்த அதே தோப்பு பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மவீனின் சடலம் மிதந்துள்ளதா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து உடனடியாக மவீன் வீட்டுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணையில் துரிதமாக இறங்கினார்கள். அப்போது கிணற்றடியிலேயே ஒரு செல்போன இருந்ததை போலீசார் கண்டெடுத்தனர்.
[மாரடைப்பால் மரணித்த இன்ஸ்பெக்டர்.. பாடையை சுமந்து வந்த எஸ்.பி.. தர்மபுரியில் நெகிழ்ச்சி! ]

நண்பர்களுடன் வாக்குவாதம்
அதில் ஆராய்ந்தபோது போலீசாருக்கு தூக்கி வாரிப்போட்டது. மவீன் எப்படி இறந்தார் என்பது அந்த செல்போனில் இருந்ததுதான் அதற்கு காரணம்! அதுவும் இறந்த சம்பவம் லைவ்-ஆக பதிவாகி இருந்தது. அந்த செல்போன் காட்சியில், தோப்பில் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப நண்பர்கள் எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்கள். வரும் வழியில் மவீன் தன் நண்பர்களிடம் போதையில் கன்னாபின்னாவென்று பேசி வாக்குவாதம் செய்து கொண்டே வருகிறார்.

மவீன் உயிரிழப்பு
இதனால் போதையில் இருந்த மற்றொரு நண்பர் மவீனை பிடித்து தள்ளி விடுகிறார். பிறகு நண்பர்கள் எல்லோருமே கிணற்றில் ஒவ்வொருவராக குதிக்கிறார்கள்... குளிக்கிறார்கள்... சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராக போதையிலேயே தட்டு தடுமாறி மேலே எழுந்து வந்து வீட்டுக்கு போய்விடுகிறார்கள்.ஆனால் மவீனுக்கு மட்டும் குளித்தும் போதை போகவே இல்லை. தடுமாறி கொண்டே இருந்ததால், கிணற்றிலேயே மூழ்கி உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

காவு வாங்கிய போதை
இவ்வளவும் அங்கிருந்த மவீன் செல்போனில் பதிவாகி இருந்தது. விஷயம் தெரிந்ததும் 4 நண்பர்களும் எஸ்கேப் ஆகி உள்ளனர். அருண்குமார் என்பவர் மட்டும் சிக்கி உள்ளார். அவரிடம் வாணியம்பாடி போலீசார் கிடுக்கிப்பிடியை ஆரம்பித்துள்ளனர். போதை விளையாட்டு வினையாகி இன்று ஒரு உயிரையே காவு வாங்கி விட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications