குஜராத் தேர்தலுக்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கும் தொடர்பு இல்லை.. சொல்வது அதிமுகவின் தம்பிதுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: குஜராத் தேர்தலுக்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின்படி அண்மையில் ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தியது. ஆனால் இதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி தொழில் துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

There is no conectivity between GST and Gujarath Election: MP Thambidurai

இதையடுத்து ஜிஎஸ்டியில் சீரமைப்பு நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டியில் இதுவரை பலமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றும் 100க்கும் மேற்பட்ட பொருட்களின் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டையில் அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழகத்திற்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறினார். மேலும் குஜராத் தேர்தலுக்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கும் தொடர்ப்பு இல்லை என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There is no conectivity between GST and Gujarath Election said ADMK MP Thambidurai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற