ஆளுநரை மத்திய அரசின் கையாளாக பயன்படுத்துகின்றனர்...கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: ஆளுநர் என்பது மத்திய அரசின் ஒரு கையால் போலத்தான் இருக்கிறார் இதனால்தான் ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா என்பதே இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, இதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் கிளப்பியுள்ளார்.

They use the governor as a servant of the central government says CPIM K. Balakrishnan

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இதுபோன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருப்பதாக கூறினார்.

புதுச்சேரியில் கிரண் பேடியை ஆளுநராக நியமித்து, அம்மாநில அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்தது. அதுபோல, தமிழகத்தில் ஸ்டாலின் அரசுக்கு இடையூறு செய்ய இந்த நியமனம் செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் புதிய ஆளுநருக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியின் நியமனம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளார்.

They use the governor as a servant of the central government says CPIM K. Balakrishnan

பாரதியாரின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்திற்கு வந்த பாலகிருஷ்ணன் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாரதியார் மணி மண்டபத்திற்கு சென்று பாரதியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாரதியாரின் நினைவு கூறும் வகையில் பாரதியாரின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார். வரவேற்கத்தக்கது இதுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆளுநர் என்பது மத்திய அரசின் ஒரு கையாள் ஆகத்தான் இருக்கிறார் இதனால்தான் ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா என்பதே இருக்கிறது மாநில மக்களும் தெரிந்தெடுத்து பெற்றிருந்த சட்டசபையில் தேர்ந்தெடுத்த தருகின்ற சட்டமன்றம் தேர்ந்தெடுக்கிற திட்டங்களில் தான் நிறைவேற்ற வேண்டுமே தவிர ஆளுநர் என்ற மத்திய அரசின் எடுபிடி வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசு ஆட்டிப்படைப்பது ஆட்சி செய்வது என்பது பொருத்தமற்றது என்பதுதான் எங்களுடைய அடிப்படையான கருத்து என்று கூறினார்.

Recommended Video

    சரியான நேரத்தில் Tamilnadu-க்கு ஆளுனராக அனுப்பப்பட்ட RN Ravi.. என்ன காரணம்?

    இதனிடையே ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+