நாய் வாலை நிமித்த முடியாது என்பதற்கு இதுவே சான்று.. சிங்கள கடற்படையின் தாக்குதல் குறித்து திருமா
நாய் வாலை நிமித்த முடியாது என்பதற்கு இலங்கை கடற்படையின் இந்த கொலைவெறித்தாக்குதலே சான்று என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாய் வாலை நிமித்த முடியாது என்பது இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித்தாக்குதலே சான்று என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயது மீனவர் பரிதாபதான கொல்லப்பட்டார். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய தாக்குலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சே அரசு தூக்கியெறியப்பட்டு தமிழக மக்கள் ஆதரவோடு சிறிசேனா அரசு பதவியேற்றப் பிறகும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்கப்படுவதாக கூறி பாஜக ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இங்கேயும் தமிழர்களுக்கு எதிரான நிலை தான் உள்ளது.
இலங்கை கடற்படையின் இந்த தாக்குதல் மூலம் நாய் வாலை நிமித்த முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இவ்வாறு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.












Click it and Unblock the Notifications