இந்திரா காந்தி நினைவு தினம்: திருநாவுக்கரசர், குமரி அனந்தன், குஷ்பு மரியாதை
இந்திரா காந்தியின் 32-வது நினைவு தினம் இன்று சத்திய மூர்த்தி பவனில் கடைபிடிக்கப்பட்டது.
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 32-வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 32-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சத்திய மூர்த்திபவனில் அவரது உருவப் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல சர்தார் வல்லபாய் பட்டேலின் 102-வது பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கும் மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல் டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினர் இன்று அமைதி பேரணி நடத்தினர்.
காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பேரணி இந்திரா காந்தி நினைவிடம் வரை நடைபெற்றது. பேரணியில் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications