பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்த திருநாவுக்கரசர்... மதுரையில் பரபரப்பு
மதுரை: மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர். இவர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்தவகையில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து திருநாவுக்கரசர் பிரச்சாரம் மேற்கொண்டார். செல்லூர், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த அவர், தொடர்ந்து பி.பி.குளம் பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயக்கமடைந்த அவர், அருகில் இருந்த வேட்பாளர் மீது சாய்ந்தார். இதனால், உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தொடர் பிரச்சாரம் காரணமாக அவர் களைப்படைந்து, உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் அடைந்ததாக தெரிவித்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, திருநாவுக்கரசர் மயங்கி விழுந்ததால் அங்கிருந்த மற்ற தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications