For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநர் இனியும் காலம் தாழ்த்துவது நியாயமாக இருக்காது: .திருநாவுக்கரசர்

தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை ஆளுநர் உடனடியாகக் கூட்ட வேண்டும் என .திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நிலையான அரசை அமைக்க, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இனியும் காலம் தாழ்த்துவது நியாயமாக இருக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.,பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசியதாவது: மறைந்த முதலமைச்சர் ஜெயலிலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசின் செயல்பாடு முற்றிலும் முடங்கியுள்ளது.

Thirunavukkarasar has demand of special Assembly meeting

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்புக்குரியது. சட்டத்தின் ஆட்சியும், அரசியல் சாசனமும் நிலைநாட்டப்பட வேண்டும். தமிழகத்தில் அரசியல் களம் குழப்பமாக உள்ளது. குழம்பிய குட்டையில் மீன் பிடித்து ஆதாயம் தேடுவதை பாஜக நிறுத்த வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் முலம் பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது அதிகார பலத்தை ஆளுநர் மூலம் செயல்படுத்த முயல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை ஆளுநர் உடனடியாகக் கூட்ட வேண்டும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்போ, மற்றொரு தரப்போ தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறுவதை நிரூபிப்பதற்காக ஆளுநர் இதைச் செய்ய வேண்டும். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பைக் கருத்தில்கொண்டு ஆளுநர் மேற்கண்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

English summary
TNCC president Thirunavukkarasar has demand of special Assembly meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X