For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ் சார்பில் நின்று டெபாசிட் கூட வாங்காத திருநாவுக்கரசர்!

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் டெபாசிட் கூட வாங்காமல் தோற்றது அவரின் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

காங்கிரஸின் அகில இந்திய பொதுச் செயலராக பதவி வகிக்கும் திருநாவுக்கரசர், புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர்.அறந்தாங்கி சட்ட மன்ற தொகுதியில் 6 முறை வெற்றியை தழுவிய இவர், இந்த முறை ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் மிகப் பெரும் தோல்வியைத் தழுவி உள்ளார்.

Thirunavukkarasar loses his deposit…

இங்கு, இவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுகவின் அன்வர் ராஜா 1 லட்சத்து 19 ஆயிரத்து 450 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருநாவுக்கரசரோ வெறும் 62 ஆயிரத்து 160 வாக்குகள் மட்டுமே பெற்று 4 ஆவது இடத்திற்கு தள்ளப் பட்டதுடன், டெபாசிட் தொகையையும் இழந்தார்.திமுகவின் முகமது ஜலீல், பாஜகவின் குப்புராமு முறையே இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

முன்னதாக தேர்தலுக்கு முன் திருநாவுக்கரசர், பாஜகவுக்கு குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில்தான் ஆதரவு உள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா முழுவதும் ஆதரவு உள்ளது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.ஒருகாலத்தில் இவர் பாஜகவில் இருந்தார் என்பதும் முக்கியமான ஒன்றாகும்.

English summary
Congress party VIP candidate SU.Thirunavukkarasar lost his Deposit in Ramanathapuram constituency. He got 4th place in counting there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X