For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுவும் அவசரம்தான்! அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி! காரணத்தை கேட்டு வாயடைத்த அதிகாரிகள்

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: கழிவறை தூய்மையாக இல்லை எனக்கூறி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை பயணி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    கழிவறை சுத்தமாக இல்லை ... ஆவேசத்தில் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி!

    பொதுவாகவே பொது இடங்கள், அரசு நிறுவனங்களில் கழிவறை எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விசயம்.

    This is too urgent! Authorities shut up after hearing the passengers reason for pulling the safety chain and stopped the train

    குறிப்பாக பலதரப்பட்ட மக்கள் பயணிக்கும் ரயில்களின் கழிவறை நிலையை பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதனால் பொறுமையிழந்த நபர்தான் தற்போது ரயிலை நிறுத்தி பரபரப்பு செய்தியாக்கி இருக்கிறார்.

    கோவை - சென்னை இடையே செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6:15 மணியளவில் கோவையிலிருந்து புறப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருக்கும் கழிவறை சுத்தமின்றி பயன்படுத்த முடியாத வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக கழிவறைக்கே செல்லாமல் 4 மணி நேரம் பயணிகள் பொறுமை காத்திருக்கின்றனர். செல்லும் வழியில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில், மதியம் அரக்கோணம் வந்த இண்டர்சிட்டி விரைவு ரயில், ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்டது. உடனே ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர், ஊழியர்கள் அனைவரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது, பிரசாந்த் என்ற பயணிதான் தனது பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுத்துள்ளார் என்பதும், அந்த அபாய சத்தத்தை கேட்டு ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து பிரசாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அபாய சங்கிலியை இழுத்ததற்கு சொன்ன காரணம் அறிந்து போலீசாரே வாயடைத்தனர்.

    ரயில் பெட்டியில் உள்ள கழிவறை தூய்மையாக இல்லாததால் 4 மணி நேரம் பயணிகள் யாருமே இயற்கை உபாதைகளை கழிக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பல முறை புகாரளித்தும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

    English summary
    The passenger pulled the safety chain and stopped the train, claiming that the train toilet was not clean : ரயில் கழிவறை தூய்மையாக இல்லை எனக்கூறி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை பயணி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X