ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை தற்போதைக்கு விடுக்க முடியாது.. கைவிரித்த அமைச்சர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை தற்போதைக்கு விடுவிக்க முடியாது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை பெற்று வருகின்றனர். இவர்களை விடுவிக்க 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்தது.

Those who are in jail in the Rajiv Gandhi murder case can not be released now: CV shanmugam

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள தங்களை விடுவிக்குமாறு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை தற்போதைக்கு விடுவிக்க முடியாது என் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விடுதலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் தற்போது முடிவு எடுக்க இயலாது என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
My minister CV Shanmugam has said that those who are in jail in the Rajiv Gandhi murder case can not be released for the time being. The release case has proceeding in Supreme Court so decision will not be taken now he said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற