சசிகலாவுக்காக 1000 போலீஸார் குவிப்பு.. கூவத்தூரில் அதிமுக அட்டகாசம்.. கேவலம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கூவத்தூர் சென்றுள்ள சசிகலாவுக்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். ரிசார்ட் அமைந்துள்ள பகுதிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவு முன்பாகவே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பல் அடைத்து வைத்துள்ளனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Thousands of Police accumulated in The resort area of Koovathoor

இந்நிலையில் இரண்டாவது நாளாக சசிகலா சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுடன் சந்தித்து வருகிறார். ஏற்கனவே சசிகலாவுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சசிகலாவுக்கு பாதுகாப்பு வழங்க கூவத்தூர் பகுதியில் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரிசார்ட்டுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னிருந்தே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டு பகுதிக்கு செல்லும் மக்களை போலீசார் தடுப்பதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் பொதுமக்களை விரட்டியடிப்பதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்களையும் போலீசார் சமாதானம் பேசி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thousands of Police accumulated in The resort area of Koovathoor. Police working for Sasikala. They opposing public to the resort area.
Please Wait while comments are loading...