For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐயா சாமி தயவு செய்து ஜாமீன்ல வாங்க.. சிறையில் வைகோவை சந்தித்து திருமா, முத்தரசன் கோரிக்கை

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவை இன்று திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தேச விரோத வழக்கில் கைதாகியுள்ள வைகோ, கடந்த ஒரு மாத காலமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tirumavalavan meets Vaiko at Puzhal prision

தேசத்துரோக வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் இருக்கும் மதிமுக தலைவர் வைகோவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், இந்தியா கம்யூனிஸ்ட்கம்யூனிஸ்ட் முத்தரசன் ஆகியோர் சந்தித்தனர்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இது நட்பு ரீதியான சந்திப்பு என்றார். கடந்த சில வாரங்களாக வைகோ சிறையில் இருந்து வருகிறார். அவரை ஜாமீனில் வரச்சொல்லி கேட்டிருக்கிறோம். ஆனால் அவர் எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியவில்லை.

நட்பு ரீதியான சந்திப்புதான். நாங்கள் யாரும் அரசியல் பேசவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார். கடந்த சட்டசபை பொதுத்தேர்தலின் போது
மக்கள் நலக்கூட்டணியில் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன், இணைந்திருந்தனர். சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணி படு தோல்வியை சந்தித்தது.

இதனையடுத்து மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைகோ விலகினார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவை திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

English summary
VCK leader Tirumavalavan and CPI state secretary Mutharasan met Vaiko at Puzhal prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X