யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை: நெல்லையின் 230வது கலெக்டர் உறுதி

திருநெல்வேலி மாவட்டத்தில் உவரி, பெருமணல், கூடுதாழை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் 52 இடங்களில் தாதுமணல் அள்ளும் குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு மணல் அள்ளுவதில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் 15 குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் சென்னை கிளம்பிய மறுநாள், நெல்லை கலெக்டர் சமயமூர்த்தி திடீரென மாற்றப்பட்டார். மணல் விவகாரத்தில் சமயமூர்த்தி மாற்றப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது.
இந்நிலையில் கோவை கலெக்டராக இருந்த கருணாகரன் நெல்லையின் புதிய கலெக்டராக நேற்று பொறுப்பேற்றார். அவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி ஆகும்.
நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்படும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்.
கூடங்குளம் விவகாரம், தாது மணல் விவகாரம் ஆகியவற்றில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பேன். மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
1790களில் நெல்லை மாவட்டம் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. அப்போதிருந்து செயல்பட்ட கலெக்டர்களில் கருணாகரன் 230வது கலெக்டராக பொறுப்பேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications