For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை இரட்டைக்கொலை வழக்கு.. 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டில் நடந்த கணவன் மனைவி கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தது நீதிமன்றம் .

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகிலுள்ள ஊத்துமலை கண்ணாடி குளம் பகுதியை சார்ந்த பால்வியபாரி சுப்ரமணியன் என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு கண்ணாடி குளம் விலக்கில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்,குண்டன் சுப்ரமணியன்,ஆகிய 2பேர் இந்த கொலையை செய்ததாக கைது செய்யப்பட்டு தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

Tirunelveli - Tenkasi court pronounces life term for 10 people in a murder case

இந்நிலையில் இந்த கொலையை பால் வியாபார போட்டியால் தான் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலையை செய்த செல்வராஜ் குடும்பத்தை அழிக்க கொலை யான சுப்ரமணியன் மனைவி மாரியம்மால் மற்றும் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 19.5.11 அன்று செல்வராஜை குறிவைத்து ஒரு காரில் ஊத்துமலை கண்ணாடி குளம் பகுதியில் வைத்து இரு சக்கர வாகனத்தில் வந்த செல்வராஜ் மீது மோதி, அவரை காரில் கடத்தி கொண்டுபோய் கொலை செய்து போட்டு விட்டு நேராக செல்வராஜ் வீட்டுக்குச் சென்ற அந்த கும்பல், செல்வராஜ் மனைவி தங்கமணியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியது.

இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து,வெள்ள துரை, மாரியம்மாள் , குமார்,உடையார், சுப்ரமணி,சேகர், மாடசாமி, இலங்கோ,மணிகண்டன், நடராஜன் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் (விரைவு நீதிமன்றம்) த்தில் நடந்து வந்தது. இவ் வழக்கில் இன்று நீதிபதி ஈஸ்வரன் தீர்ப்பு வழங்கினார்.குற்றவாளிகள் 10 பேருக்கும் இரு வழக்குக்கும் சேர்த்து ஆயுள் தண்டனையும், தலா 2.ஆயிரத்து 300 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

English summary
Tirunelveli - Tenkasi court pronounces life term for the ten who accused in a murder case,Sensation there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X