Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோலார்பேட்டையில் குழந்தை தலையில் சிக்கிய சில்வர் குடம்.. மூச்சுகூட விட முடியல! திகைத்த திருப்பத்தூர்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: குழந்தையின் தந்தை ஒரு தெரு வியாபாரி ஆவார்..சம்பவத்தன்று குழந்தையின் தாய் வீட்டில் பானிபூரி தயாரிக்க பட்டாணி குழம்பு சமைத்துக் கொண்டிருந்தார்.. அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, சமையலறைக்குள் நுழைந்து, பட்டாணி குழம்பில் தவறி விழுந்தது. அலறல் சத்தம் கேட்டு, தாய் வந்து, பானையில் விழுந்த குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் பலத்த தீக்காயங்களுக்கு ஆளான அந்த குழந்தை இறந்தேவிட்டது.. பெற்றோர்களின் அஜாக்கிரதையால் இப்படி பல பிஞ்சுகள் உயிரிழக்க நேரிடுகிறது. நேற்றைய தினம், திருப்பத்தூர் மாவட்டத்தில், குடத்தில் சிக்கிய ஒரு குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர் தீயணைப்பு வீரர்கள்.

10 நாட்களுக்கு முன்பு, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தது.. வாழக்காடு அருகே உள்ளது செருவாயூர் என்ற பகுதி.. இங்க ஜிஜி லால் என்பவர், தன்னடைய மனைவி அதுல்யா என்பவருடன் வசித்து வருகிறார்.

Tirupathur Jolarpet Tirupattur

இந்த தம்பதிக்கு அன்விக்லால் என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது.. சம்பவத்தன்று, குழந்தை தன்னுடைய தாத்தாவுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தது. பிறகு, பேரன் விளையாடுவதற்காக, விளையாட்டு பொருட்களை எடுக்க தாத்தா வீட்டுக்குள் சென்றார்.. அந்த நேரம் பார்த்து, அங்கிருந்த அலுமினிய பாத்திரத்தை எடுத்து தலையில் கவிழ்த்து விளையாடியது குழந்தை..

அலுமினிய பாத்திரம்

பிறகு திடீரென அந்த அலுமினிய பாத்திரம் குழந்தையின் தலையில் சிக்கி கொண்டது. இதனால் குழந்தை பயத்தில் கதறி அழுதது... உடனே குடும்பத்தினர் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை எடுக்க முயன்றனர்.. ஆனால், எப்படி எப்படியோ முயற்சித்தும், அந்த பாத்திரத்தை வெளியே எடுக்க முடியவில்லை.. இதனால் குடும்பத்தினர், அப்படியே குழந்தையை முக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தூக்கி சென்றனர்.

அங்கு தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் கபூர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சாமர்த்தியமாக அலுமினிய பாத்திரத்தை வெட்டியெடுத்து, பிறகு அதனை அகற்றி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

அதுவரை குழந்தையும் பயத்தில் அழுதுகொண்டேயிருந்தது.. நீண்ட நேரம்கழித்து, பாத்திரத்தை எடுத்த பிறகுதான் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது.. உடனே குழந்தைக்கு தீயணைப்பு வீரர்கள் சாக்லேட்களை தந்தார்கள்.. குழந்தையை மீட்ட தீயணைப்பு துறைக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்திருந்தனர்.. இந்த சம்பவம் கேரளாவில் பலரது கவனத்தையும் மீட்டிருந்தது.

சிறுவனின் தலையில் எவர்சில்வர் குடம்

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் நேற்று இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. நாட்றம்பள்ளி அடுத்துள்ள ஆத்துக்குப்பம் ஊராட்சி சங்கலாபுரத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்.. இவரது மனைவி அருணா. இந்த தம்பதிக்கு ரக்‌ஷிதன் என்ற 4 வயது மகன் இருக்கிறான்.

நேற்று மாலை சிறுவன் தன்னுடைய வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த ஸ்டீல் குடத்தை கவிழ்த்து தன்னுடைய தலையில் வைத்து விளையாடியபோது எதிர்பாராமல், அந்த குடம் சிறுவனின் தலையில் சிக்கிக்கொண்டது.

இதனால் பயந்துபோன சிறுவன் அலறியபடி கூச்சலிட்டான். அவனது அலறலை கேட்டு பதறியடித்துக் கொண்டு வந்த பெற்றோர், குழந்தையின் தலையில் சிக்கிய குடத்தை வெளியே எடுக்க முயன்றனர். அவர்களால் முடியவில்லை என்பதால், அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து குடத்தை வெளியே எடுக்க முயன்றனர்.. அவர்களாலும் முடியவில்லை.

ஸ்டீல் குடத்தை வெட்டி எடுத்து

இதையடுத்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடத்தை எடுக்க முயன்றனர்..

அலுமினிய பாத்திரம் என்றால் வளைத்து, உடைத்து எடுத்துவிடலாம்.. இது எவர்சில்வர் என்பதால், தீயணைப்பு வீரர்களும் கடுமையாக போராடினார்கள்.. சுமார் அரைமணி நேரம் கழித்து, ஸ்டீல் குடத்தை துண்டித்து அதற்கு பிறகு சிறுவனை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பதற வைத்து வருகிறது.

ஆக்சா பிளேடு, கட்டிங் பிளேயர்

இப்படித்தான் 4 மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்திலும், கீர்த்தனா என்பவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை லக்க்ஷனாவின் தலையில் அலுமினிய பாத்திரம் மாட்டிக்கொண்டது.

இதனால் குழந்தை மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.. அங்கு மருத்துவ குழுவினர் அனைவருமே போராடி, பாத்திரத்தை எடுத்தனர்.. இதற்காக ஆக்சா பிளேடு, கட்டிங் பிளேயர் உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் பாத்திரத்தை அறுத்து எடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+