மாட்டிறைச்சி தடை - சட்டசபையில் ஸ்டாலின் தனி தீர்மானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டசத்திற்கு எதிராக சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சார்பில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தமிழக சட்டசபையின் 5 நாள் கூட்டம் இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கி நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்த உடன் எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், மாட்டிறைச்சி தடை சட்டத்திற்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

TN assembly : Stalin single resultution slaughter ban cow issue

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக மேகாலயா,கேரளா,புதுச்சேரி மாநிலங்களில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய அவர், மிழக அரசு இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேகாலயா, கோவா போல இங்கும் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று கூறினார். கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். தீர்மானம் நடத்தாவிட்டாலும் கருத்தாவது பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president M.K. Stalin has passed single resultion against slaughter ban cow issue in assembly.
Please Wait while comments are loading...