For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்கூட்டர் மானிய திட்டத்திற்கு ரூ.250 கோடி, லேப்டாப் திட்டத்திற்கு ரூ.758 கோடி: பட்ஜெட்டில் அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு ரூ250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பன்னீர்செல்வம் கூறியதாவது: புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமை பூங்கா அமைக்கப்படும்.

TN Budget 2018: Rs 250 crore will be allocated for the scooter subsidy scheme

மாணவர்களுக்கு விலையில்லா, லேப்டாப் வழங்க ரூ.758 கோடி, கட்டாய கல்வியை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கப்படும். 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு ரூ.347 கோடி; நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1197 கோடி ஒதுக்கீடு; மணலியில் ரூ.18.51 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு படை குடியிருப்புகள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ. 10,000 இல் இருந்து 25,000 ஆக உயர்த்தப்படும்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.482.84 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

English summary
Rs 250 crore will be allocated for the scooter subsidy scheme, Deputy Chief Minister O. Panneerselvam said in the budget speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X