For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Tamil Nadu Budget: ஓ.பி.எஸ்ஸின் பத்தாவது பட்ஜெட் யாருக்குமே பத்தாத பட்ஜெட்-மு.க.ஸ்டாலின் பொளேர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu Budget 2020 | கல்வி முதல் விவசாயம் வரை அதிமுக அரசின் 2020-21 தமிழக பட்ஜெட்

    சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த 10-வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    தமிழக சட்டசபையில் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ .பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    TN Budget is deficit budget, says MK Stalin

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பின்பற்றி 196 நிமிடங்கள் ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்திருக்கிறார். மத்திய அரசை அதிமுக அரசு எப்படி பின்பற்றுகிறது என்பதற்கு இது உதாரணம்.

    பட்ஜெட் உரையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி நீடிக்காது என்று கூறிவந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார் ஓ. பன்னீர்செல்வம்.

    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது சமாதிக்குச் சென்று தியானம் செய்து இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறியதும் அரசை எதிர்த்து சட்டசபையில் வாக்களித்ததும் அதுதொடர்பான வழக்கு இன்று விசாரணையில் இருப்பதும் எல்லோருக்கும் தெரியும். அதை அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

    கல்வி முதல் விவசாயம் வரை.. கடைசி முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் அதிமுக அரசு.. என்ன எதிர்பார்க்கலாம்! கல்வி முதல் விவசாயம் வரை.. கடைசி முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் அதிமுக அரசு.. என்ன எதிர்பார்க்கலாம்!

    ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் இது பத்தாவது பட்ஜெட். பத்தாவது பட்ஜெட் எவருக்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது.

    நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, கடன் சுமை ஆகியவை அதிமுக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் கடன் சுமை என்பது ஒரு லட்சம் கோடி தான். ஆனால் 9 ஆண்டுகளில் கடன் சுமை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.

    தமிழக அரசின் அனைத்து துறைகளும் கடனில் மட்டுமல்லாது மோசடியிலும், ஊழலிலும் திளைக்கிறது. இன்றைய பட்ஜெட்டில் தொலைநோக்குத் திட்டங்களும் இல்லை; வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. அமைச்சர்கள் சிலரது துறைகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்பது மர்மமாக இருக்கிறது.

    இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

    English summary
    DMK President MK Stalin said that Tamil Nadu Budget is a deficit budget. There are no for anyone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X