பிரதமர் மோடியுடன் முதல்வர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்ததாக தகவல்
சென்னை: ஒரு நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, நீட் விவகாரம், ஆன்லைன் சூதாட்டம், ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் முதல்வர் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார். ரூ.2,467 கோடி சென்னை புதிய விமான முனையம், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை வந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அதன்பிறகு சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதன்பிறகு மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்றார். அதன்பிறகு பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட பிறகு மைசூரு செல்வதற்காக பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, நீட் விவகாரம், ஆன்லைன் சூதாட்டம், ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் முதல்வர் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், பல்வேறு மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில், ஆளுநர் விவகாரம் குறித்தும் இந்த சந்திப்பின் போது கோரிக்கை மனு அளிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications