பெரும் பரபரப்பு.. தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா பரிந்துரை!
புதுவையில் தங்கியுள்ள 19 எம்எல்ஏ-க்களின் பதவிகளும் பறிப்பதற்காக சபாநாயகர் தனபாலிடம் தலைமைக் கொறடா ராஜேந்திரன் மனு அளித்துள்ளார்.
சென்னை : கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு வரும் 19 எம்எல்ஏ-க்களின் பதவிகளும் பறிப்பதற்காக சபாநாயகர் தனபாலிடம் தலைமைக் கொறடா ராஜேந்திரன் மனு அளித்துள்ளார்.
அதிமுக இணைப்புக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் 19 பேரும் புதுவையில் தங்கியுள்ளனர். மேலும் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று இந்த அணியினர் கோரி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
பெரும் பரபரப்பு.. தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா பரிந்துரை! pic.twitter.com/xTVeNjxc2c
— Oneindia Tamil (@thatsTamil) August 24, 2017
அப்போது அவர் கூறுகையில், கட்சி தலைமைக்கு எதிராக 19 பேரும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். தலைமை கொறடா என்ற முறையில் என்னிடம் தகவல் தெரிவிக்காமல் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது.
எனவே கட்சிக்கு எதிராக செயல்பட்ட 19 எம்எல்ஏ-க்களின் பதவிகளையும் பறிக்க சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளேன் என்றார் அவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications