பிரதமர் மோடிக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திரமோடிக்கு இன்று 67-வது பிறந்தநாள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

TN CM, Deputy wishe PM Modi on his birthday

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது ட்விட்டர் பக்கத்தில், நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை பிரதமர் மோடி பெற வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓபிஎஸ், இந்த நாட்டுக்கு சேவைபுரிய நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை பெற்றிட வாழ்த்துகள் என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி சார்பாகவும் திமுக சார்பாகவும் வாழ்த்துத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu CM, Deputy CM and Dmk working leader M.K.Stalin wished birthday wishes to PM Narendra modi in Twitter
Please Wait while comments are loading...