For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்- live

By Mathi
Google Oneindia Tamil News

-ஜெயலலிதா உடல் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ராஜாஜி ஹாலை நோக்கி கிளம்பியது

-போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா உடல் புறப்பட்டது

-பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜாஜி அரங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது

-சாலைகளின் இருபுறமும் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

-ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி வருவதாக தகவல்

-பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ளதாக தகவல்

-முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அமெரிக்க அரசு இரங்கல்

-இந்தியா ஒரு தலை சிறந்த தலைவரை இழந்து விட்டது -அமெரிக்க அரசு

-ஜெ. மறைவையொட்டி சென்னையில் 30 ஆயிரம் போலீசார் குவிப்பு

-ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னை வருகை

-ஜெயலலிதா உடல் வைக்கப்பட உள்ள ராஜாஜி ஹால் பகுதியில் இப்போதே தொண்டர்கள் குவிந்தனர்

-ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள மெரீனா கடற்கரையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

-ஜெயலலிதா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது

-ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர்

-பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிப்பு

-குடும்ப முறைப்படி ஜெயலலிதா உடலுக்கு செய்த சடங்குகள் முடிவடைந்தன

-போயஸ் கார்டனிலிருந்து ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதா உடல் கொண்டு செல்லப்பட உள்ளது

-ஜெயலலிதா மறைவு.. புதுச்சேரி மாநிலத்திலும் இன்று, பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

-மறைந்த ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

-ஜெயலலிதா அதிமுக தொண்டர்களின் உள்ளங்களில் என்றும் நிலைத்திருப்பார்: கருணாநிதி

-போயஸ் கார்டனில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ளது

-போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன

-இறுதிச்சடங்கு பின்னர் ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல் வைக்கப்படுகிறது

-போயஸ் கார்டனில் தொண்டர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு

-எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் டிஜிபி ஆய்வு

-ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது

-எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்

TN CM Jayalalithaa no more

-இன்று மாலை 4.30 மணிக்கு இறுதி சடங்கு

-போயஸ் கார்டனில் தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்

-போயஸ் கார்டனை குலுங்க வைக்கிறது 'அம்மா' ..அம்மா எனும் தொண்டர்களின் கதறல்

-மக்களின் கண்ணீர்பெருவெள்ளத்தில் மிதந்தபடி செல்கிறது ஜெயலலிதாவின் உடலை கொண்டு செல்லும் வாகனம்

-ஜெ. உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டுவரப்பட்டது

-ஜெயலலிதாவின் முகத்தை கடைசியாக பார்க்க கண்ணீர் கதறலுமாக தொண்டர்கள் குவிந்தனர்

-அப்பல்லோவில் இருந்து போயஸ் கார்டனுக்கு ஜெ.விடன் உடல் புறப்பட்டது

-ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெ.விடன் உடல் போயஸ் கார்டன் புறப்பட்டது

-ஆம்புலன்ஸ் உட்பட 8 வாகனங்கள் கான்வாயில் செல்கின்றன

-இன்னும் சற்று நேரத்தில் ஜெயலலிதாவின் உடல் அப்பல்லோவில் இருந்து போயஸ் கார்டன் கொண்டு செல்லப்படும்

-போயஸ் கார்டனில் இருந்து விடிவதற்குள்ளாயே ராஜாஜி ஹாலுக்கு ஜெ. உடல் கொண்டு செல்லப்படும்

-தமிழகத்தின் இந்திரா காந்தியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா.. ஈவிகேஎஸ் இளங்கோவன் புகழாரம்

-ஜெ.வின் போயஸ் தோட்டம் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்

-முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன

-ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மும்முரம்

-அப்பல்லோ மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வருகை தந்தனர்

-ஜெயலலிதா மறைவுக்கு பீகாரில் 1 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: முதல்வர் நிதிஷ்குமார்

-இந்தியா தனது வீர மங்கையை இழந்துவிட்டது.. ஜெ. மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

-ஜெயலலிதாவின் மறைவு அதிமுக தொண்டர்களுக்கும் மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே துயரம்: திருமாவளவன்

-68 வயது என்பது இறக்கும் வயதல்ல: திருமாவளவன்

-இரண்டரை மாதம் தீவிர சிகிச்சை அளித்தாலும் நம்மால் அவரை காப்பாற்ற முடியவில்லை: திருமாவளவன்

-ஜெயலலிதாவின் மறைவு இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள பெரிய வெற்றிடம்: திருமாவளவன்

-ஜெயலலிதா எவர்க்கும் எதற்கும் அஞ்சாதவர்: திருமாவளவன்

-ஜெயலலிதா போர்க்குணம் வாய்ந்தவர்; அஞ்சாமை அயராமைதான் அவரது குணம்: திருமாவளவன்

-அரசியல் வாழ்க்கையில் மக்கள் தலைவராக வரலாறு படைத்தவர் ஜெயலலிதா: திருமாவளவன்

-ஆளுமை நிறைந்த தலைவரை நாம் இழந்துவிட்டோம்: திருமாவளவன்

-ஓ. பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவியேற்பு

-ஒ பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்

-ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு - ராமதாஸ்

-ஜெயலலிதா காலமான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் - விஜயகாந்த்

-ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - விஜயகாந்த்

-தமிழக முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் ஓ. பன்னீர்செல்வம்

-ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்பு விழா தொடங்கியது

-பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி

-ஜெயலலிதா மறைவு அதிர்ச்சி அளிக்கிறது: மு.க. ஸ்டாலின்

-அதிமுக தொண்டர்களுக்கும் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்: மு.க. ஸ்டாலின்

-ஜெயலலிதா மறைவையடுத்து தமிழகத்தில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு

-ஜெயலலிதா மறைவிற்கு ராகுல்காந்தி இரங்கல்

-தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் சற்று நேரத்தில் பதவியேற்பு

-புதிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

English summary
Apollo Hospital announces demise of Tamilndu CM J Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X