For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அற்புதமாக மவுத் ஆர்கன் வாசிக்கும் க்யூட் "ஆண்டாள்"... இன்னும் வாசிக்கனும்னு பிடிவாதம்

கோவையில் கோயில் யானை ஆண்டாள் மிகவும் அற்புதமாக இசைக் கருவியை வாசிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கோவை: கோவை தேக்கம்பட்டியில் உள்ள யானை புத்துணர்ச்சி முகாமில் யானை ஒன்று மவுத் ஆர்கன் வாசிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த மாதம் 4-ஆம் தொடங்கியது.

தமிழக அரசு சார்பில் இந்த புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது.

யானைகள் வருகை

யானைகள் வருகை

இந்த முகாமுக்காக கோயில்கள் தமிழகம் முழுவதிலிருந்து வரவழைக்கப்பட்டன. அவற்றுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

யானைகள்

யானைகள்

இதற்காக தமிழகத்தில் இருந்து முதல் நாள் அன்றே 33 யானைகள் வந்தன. 48 நாட்கள் நடக்கும் இந்த முகாமில் யானைகளுக்கு காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் மூலிகை கலந்த உணவு வழங்கப்படுகிறது.

சிகிச்சை

சிகிச்சை

யானைகளுக்கு நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. யானைகளின் உடல்நிலையை கண்காணித்து அவற்றுக்கு மருத்துவ சிகிச்சைக்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம் நாளையுடன் (பிப் 20) அன்று முடிவடைகிறது.

ஆண்டாள் யானை

ஆண்டாள் யானை

புத்துணர்ச்சி முகாமுக்கு வந்துள்ள ஆண்டாள் எனும் யானை, வாயில் வாசிக்கப்படும் கருவியை பிரமாதமாக வாசிக்கிறது. இதற்காக இசை கற்று கொடுக்கும் கலைஞரும் முகாமில் உள்ளார். மவுத் ஆர்கனை கொடுத்தவுடன் வாயில் வைத்து அழகாக வாசிக்கும் யானை, அதன் பயிற்சியாளர் கருவியை வாங்கியதும் இன்னும் வாசிக்க வேண்டும் என்பது போல் ஒரு சிக்னலை எழுப்புகிறது. அதற்கு அந்த பயிற்சியாளர் சரி நீதான் சமர்த்து என்று கொஞ்சுகிறார்.

சமூகவலைதளங்களில்..

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த வீடியோவுக்கு 300 முறைக்கும் மேல் லைக்ஸ் விழுந்துள்ளது. 130 முறை ரீடுவீட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும்தான் இதுபோல் நடக்கும் என்று நெட்டிசன்கள் கமென்ட் கொடுத்துள்ளனர்.

English summary
An elephant named Andaal in rejuvenation camp plays mouth organ or Harmonica. This video goes viral in social medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X