போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான குற்றவழக்குகள் வாபஸ் இல்லை: அரசு திட்டவட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் மீது பதியப்பட்டுள்ள குற்றவழக்குகள் வாபஸ் இல்லை என அரசு ஹைகோர்ட்டில் அறிவித்தது.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு இன்றும் ஹைகோர்ட்டில் தொடர்ந்தது. அப்போது அரசு சார்பில் அளித்த பதிலில், போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட தொழிலாளிகள் மீது பதியப்பட்டுள்ள குற்ற வழக்குகளை வாபஸ் பெற போவதில்லை என தெரிவிக்கப்பட்டது.

TN government says criminal cases filed against transport workers will not withdrawn

அதேநேரம் வேலை நிறுத்த காலத்திற்கும் சேர்த்து ஊதியம் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தது அரசு. ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு மத்தியஸ்தம் பேச தயாராக இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், வேலை நிறுத்தம் தொடர்பாக இதுவரை யார்மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதிபட தெரிவித்துள்ளது.

"பொதுமக்கள் படும் சிரமத்தை யாரும் கணக்கில் கொள்ளவே இல்லை. தொழிலாளர்கள் பிரச்னைக்காகவே தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர் பேச்சுவார்த்தைக்கு செல்வதை ஏற்பதும், மறுப்பதும் தொழிற்சங்கங்களின் விருப்பம்" என்று ஹைகோர்ட் தனது கருத்தை தெரிவித்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In the State High Court, the TN government declared that the criminal cases filed against transport workers will not withdrawn while The government promised to pay for the strike period. The government has confirmed to the HC that no action has been taken against the employees yet.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற