15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

15 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 15 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

தமிழக அரசு பட்டியலில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கடந்த வாரம் பதவி உயர்வு வழங்கப்பட்டது. 20 அதிகாரிகள் இதன் மூலம் புதிய பொறுப்பில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

TN government transfers 15 IAS officers

இந்த நிலையில் தற்போது 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் பெற்று இருக்கிறார்கள். இதற்கான ஆணையை தமிழக அரசு அந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கியது.

அதன்படி சிவகங்கை ஆட்சியர் மலர்விழி தருமபுரி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.அரியலூர் மாவட்ட ஆட்சியராக விஜயலட்சுமி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி கடலூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.மரியம் பல்லவி பால்தேவி தேனி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

பிரசாத் மு.வடநேரே குமரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம் பிற்படுத்தப்ப நலத்துறை இயக்குனராக நியமனம்

அன்பழகன் கரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கரூர் மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் நிலவியல் சுரங்கத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி ப்ரியா வணிக வரித்துறை இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கோவிந்தராஜ் ஆதிதிராவிட பழங்குடியினர் நலத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

பழனிச்சாமி நிலவியல் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தோட்டக்கலைத்துறை இயக்குனராக சுப்பையன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சத்தய மூர்த்தி போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+