For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளுநர் ரோசையாவுடன் உள்துறைச் செயலாளர், டிஜிபி அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, உடனடியாக அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு வி்ட்டதால், தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சர்களும் பெங்களூரில் உள்ளதால் தமிழகத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மத்திய அரசும், ஆளுநரை கேட்டுள்ளதால், தற்போது ஆளுநருக்கு வேலை வந்துள்ளது.

TN Governor summons HS and DGP

தமிழக உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோரை ஆளுநர் அவசரமாக அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஆளுநர் மாளிகைக்கு விரைந்து சென்று ஆளுநருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு குறித்தும், தமிழகத்தில் அதிமுகவினர் மேற்கொண்டு வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் ஆளுநர் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

English summary
TN governor Rosiah has summoned the home secretary and the DGP after CM Jayalalitha was convicted and sentenced to 4 years in DA case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X