Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் பின்புல ஆக்கிரமிப்பாளர்.. சென்னை மணப்பாக்கம் குளம் விவகாரத்தில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை ஆலந்தூரை அடுத்த மணப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குளத்தை புனரமைத்து மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த இராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆலந்தூர் மணப்பாக்கத்தில் உள்ள குளத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் கட்டுமானப் பொருட்களை கொட்டி ஆக்கிரமித்தும், நீர்நிலையில் கழிவு நீர்களை கலந்து மாசுபடுத்தியும் வருகின்றனர்.

கோடைக்காலங்களில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் பறவைகளை பாதுகாக்க கடந்த 2019 ம் ஆண்டு குளத்தை சுத்தம் செய்து 30 டன் கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

tn govt take steps to prevent further encroachment Alandur Manapakkam : madras high court

அரசியல் பின்புலம் கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசுக்கு இரண்டு முறை புகார் மனு அளித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவித்துள்ளார்

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குளத்தை தூர்வாரி புணரமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்

மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை புனரமைத்து மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+