Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாலை 71%.. இரவு 12 மணிக்கு 64% ! ஏறி இறங்கிய வாக்குச் சதவீதம்! நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

ஆனால், 10 தொகுதிகளில் இந்த வாக்குச் சதவீதம் என்பது வித்தியாசப்பட்டுள்ளது. குறிப்பாகச் சொன்னால், 4% இல் இருந்து 10% வரை ஒரு ஜம்ப் ஏற்பட்டுள்ளது. கோயமுத்தூரில் முதலில் 71% என்றார்கள். அதன்பின்னர் கொடுத்த அப்டேட்டில் 64% ஆகக் குறைந்து சொல்லப்பட்டது.

TN Lok Sabha Election 2024 Errors in vote percentage data provided by Election Commission

அதைப்போன்று தூத்துக்குடியில் 11% வரை வாக்குப்பதிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது இரவு 7 மணிக்கு 70.95% வாக்குப்பதிவு என்று சொல்லப்பட்டது. அதே நள்ளிரவு 12 மணிக்கு அது 59.96% எனக் குறைத்துச் சொல்லப்பட்டுள்ளது.

இதைப் போலவே தர்மபுரியில் இரவு ஏழு மணிக்கு 75.44% என்று தெரிவிக்கப்பட்டது. அது நள்ளிரவு 12 மணிக்கு 81.48& என்று உயர்த்தி சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் இரவு 7 மணிக்கு 69.79% வாக்குப்பதிவு எனக் கூறப்பட்ட நிலையில், அதே நள்ளிரவு 12 மணிக்கு 60.21% என மாற்றம் பெற்றுள்ளது.

மாலை 6 மணி வரை வரும் அனைவருக்கு டோக்கன் கொடுத்து முழுமையாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

அப்படிப் பார்த்தால், மாலை 6 மணிக்கு மேல் வாக்குகள் சதவீதம் முன்பைவிட கூட வேண்டுமே ஒழியக் குறைத்துக் காட்ட முடியாது. ஆனால், சில இடங்களில் கூடப்பட்ட எண்ணிக்கை இரவில் குறைந்துள்ளது.

TN Lok Sabha Election 2024 Errors in vote percentage data provided by Election Commission

வழக்கமாக இரவு 7 மணிக்கு வெளியாகும் வாக்குப்பதிவு விவரம் பெரும்பாலும் 1% முதல் 1.5% வரைதான் மாறுபடும். ஆனால் இங்கே அப்படியே தலைகீழாக மாறி உள்ளது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்குத் தேர்தல் ஆணையத்தின் அலட்சியப் போக்குதான் காரணம் என்று பொதுவாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதையும் தாண்டி வேறு என்ன நடந்தது எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க முன்வர வேண்டும் என அரசியல் கட்சியினர் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சென்னையைப் பொறுத்த வரை வடசென்னையில் 60.13% ஆகவும் தென்சென்னையில் 54.27% ஆகவும் மத்திய சென்னையில் 53.91% ஆகவும் வாக்கு சதவீதம் பதிவாகி உள்ளது.

இது கடந்த 2019 ஆண்டை விடக் குறைவு. படித்தவர்கள் அதிகம் உள்ள சென்னையில் கூட வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்னும் உருவாகவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

TN Lok Sabha Election 2024 Errors in vote percentage data provided by Election Commission

வாக்கு சதவீதம் குறைந்தது பற்றி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், "எல்லா பெருநகரங்களிலும் வாக்கு சதவீதம் என்பது குறைவாகவே பதிவாகி வருகிறது.

சென்னையில் மட்டும் குறைவாகப் பதிவாகி உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன். பொதுவாக அர்பன் நகரங்களில் மாநில சராசரியைவிட வாக்கு சதவீதம் குறைவாகவே இருக்கும்.

அப்படிப் பார்த்தால் சென்னையில் எல்லா இடங்களிலும் 4% வாக்குப்பதிவு குறைந்துள்ளது. தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை என்று சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் முன்பைவிட குறைவாகவே வாக்குகள் பதிவாகி உள்ளன.

சென்னையைப் போலவே டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே,நாக்பூர் என்று பல பெருநகரங்களில் வாக்குசதவீதம் குறைவாகவே உள்ளது. பெருநகரங்களில் உள்ளவர்கள் தொழில் சம்பந்தமாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ நகர்ந்து கொண்டே உள்ளனர்.

அவர்கள் திரும்ப ஊருக்கு வந்து வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் சிலர் ஊரிலிருந்தாலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள்.

TN Lok Sabha Election 2024 Errors in vote percentage data provided by Election Commission

பலரது மனநிலை என்னவாக இருக்கிறது என்றால், நம்ம ஒரு ஓட்டுப் போடவில்லை என்றால் என்ன ஆகிவிடப்போகிறது என்று நினைத்து வீட்டிலேயே இருந்து விடுகிறார்கள்.

அப்படி பலரும் நினைத்து வீட்டில் இருப்பதுதான் பிரச்சினை. ஒவ்வொரு ஓட்டாகச் சேர்ந்து பல ஆயிரம் ஓட்டுக்களாக அவை மாறி விடுகின்றன. அதை வாக்காளர்கள் உணரவேண்டும்.

சிலர் தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் மட்டும் ஓட்டுக் குறைவாக உள்ளது என நினைக்கிறார்கள். அப்படி இல்லை. பாண்டி பஜார், தி நகர் போன்ற முக்கியமான பகுதிகளில் கூட வாக்கு சதவீதம் குறைவாகப் பதிவாகி உள்ளது. இதுவே பொதுவான நிலையாக உள்ளது.

நாங்கள் கணித்தவரை மதியம் வெயில் நேரத்தில் ஓட்டுப்பதிவு மிகக்குறைவாக இருந்துள்ளது. இது கூட மேலோட்டமான புரிதல்தான்.
இன்னும் நாம் ஆழமாக அலசி ஆராய வேண்டும். அதற்கான காரணங்கள் என்ன என்று பூத் வாரியாக நாம் ஒரு ஆய்வை செய்ய வேண்டும். அப்போதுதான் முழுமையான உண்மை நிலவரம் தெரியும்" என்கிறார்.

இந்த ஆண்டு சென்னை 56%தான் வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+