காஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரி சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

  கத்துவா படுகொலையின் முக்கிய குற்றவாளி சஞ்சிராம் தாத்தா

  சென்னை: காஷ்மீரில் பலாத்காரம் செய்யப்பட்டு ஈவுஇரக்கமின்றி கொல்லப்பட்ட 8 வயது சிறுமிக்கு நீதி கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் குதிரை மேய்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமியை அங்கிருந்து கடத்தி சென்ற மர்ம நபர்கள் 6 பேர் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து 4 நாட்களாக சீரழித்தனர்.

  TN Muslim Munnetra Kazhagam involves in protest to ask justice for Kashmir girl

  இதைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து அந்த சிறுமியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலையும் செய்து காட்டுப் பகுதியில் வீசினர். 3 மாதங்கள் கழித்து வெளியே வந்த இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

  இந்த சம்பவத்துக்கு நீதி கோரி சமூகவலைதளங்களில் கொதித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilnadu Muslim Munnetra Kazhagam involves in protest to need justice for Kashmir girl who sexually assaulted and murdered by 6 members.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற