For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவுக்கு போனா தொழில் நல்லாருக்கும்.. தமிழ்நாட்டுக்கு வந்தா...?!

Google Oneindia Tamil News

சென்னை: தொழில் தொடங்க சாதகமான சூழல்கள் கொண்ட மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 15வது இடத்தில் உள்ளது. அதேசமயம், இப்பட்டியலில் ஆந்திர மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2வது இடத்தில் தெலுங்கானா மாநிலம் உள்ளது. 3வது இடம் ஹரியானாவுக்கு. தமிழகம் டாப் 10க்குள் கூட வர முடியாமல் 15வது இடத்தில் தொக்கி நிற்கிறது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான தொழில் வர்த்தக ரேங்கிங் பட்டியலை உலக வங்கியும், மத்திய தொழி்ல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறையும் இணைந்து வெளியிட்டுள்ளன.

மீண்டும் முதலிடத்தில் ஆந்திரா

மீண்டும் முதலிடத்தில் ஆந்திரா

இதில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் தொடர்கிறது. கடந்த ஆண்டும் இதுதான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அப்போது ஆந்திராவுடன், தெலுங்கானாவும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தது.

தெலுங்கானா, ஹரியானா

தெலுங்கானா, ஹரியானா

தெலுங்கானா மாநிலம் 2வது இடத்திற்கு இறங்கி வந்துள்ளது. 3வது இடத்தைப் பிடித்துள்ளது ஹரியானா மாநிலம். ஜார்க்கண்ட், குஜராத், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கர்நாடகாவுக்கு 8

கர்நாடகாவுக்கு 8

கர்நாடக மாநிலம் 8வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 9வது இடத்திலும் மேற்கு வங்கத்திற்கு 10வது இடமும் கிடைத்துள்ளன. மேகாலயா மாநிலம் 36வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் உள்ளது.

15வது இடத்தில் தமிழகம்

15வது இடத்தில் தமிழகம்

இந்தப் பட்டியலில் தமிழகம் 15வது இடத்தில் இருக்கிறது. இது மோசம்தான் என்றாலும் கூட, கடந்த ஆண்டு 16வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது.

English summary
Andhra has found 1st place in DIPP ranking and Tamil Nadu is placed in 15th place in the list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X