இமாச்சலில் பாஜகவின் காவிக்கொடி பறக்கலாம்... தமிழகத்தில் பறக்காது

இந்தியாவில் தலையாக திகழும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக தனது கொடியை பறக்க விட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் காவிக்கொடி பறக்க முடியாது என்றே தமிழக அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. 19 மாநிலங்களில் காவிக்கொடி பறக்கிறது. அதுபோல தமிழகத்திலும் பாஜக வெல்லும் என்று சொல்கிறார் தமிழிசை சவுந்தராஜன். அது நடக்காது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

வடக்கே இமாச்சல் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள், மேற்கே குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா வரை பாஜக ஆட்சி அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும் முன்பாக 7 மாநிலங்களில் மட்டுமே பாஜக வசமிருந்தது.

TN political leaders hope no saffron in Tamil Nadu

காங்கிரஸ் கட்சி 13 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் பல மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் பாஜக அடுத்தடுத்து வெற்றி பெற்று காவிக்கொடியை பறக்க விட்டுள்ளது.

வடக்கே போல தெற்கிலும் பாஜகவின் காவிக்கொடி பறக்கும் வெல்வோம் என்று கூறி வருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அவர் சொன்ன தெற்கே கர்நாடகா வரை காவிக்கொடி பறக்கலாம். ஆனால் கேரளா, ஆந்திரா, தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது என்றும் அங்கு காவிக்கொடி பறக்க முடியாது என்பதையும் தமிழிசை சவுந்தராஜன் மறந்து விட்டார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+