தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்த பெண்... தமிழகத்தில் ஒரு உலக சாதனை !
சென்னை: காஞ்சிபுரத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வேதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச முதல் யோகா தினம், கடந்த ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அதேபோல் 2வது சர்வதேச யோகா தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

பல்வேறு மாநிலத்தில் யோகா தினத்தை கொண்டாடும் வகையில் யோகாசன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் மோடியும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் வசித்து வரும் கே.பி ரஞ்சனா (34). என்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
நேபாளத்தை சேர்ந்த உத்தம் முக்தன் கடந்த 2015-ல் தொடர்ந்து 50 மணி நேரம் யோகா செய்து அசத்தியுள்ளார். அவரை தொடர்ந்து, ரஞ்சனா ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிட இடைவெளியில் 600 யோகா ஆசானங்களை செய்துள்ளார் என்று மஹாமஹாரிஷி அறக்கட்டளை நிர்வாகி ரமேஷ் ரிஷி தெரிவித்துள்ளார்.
ஜூன் 19-ம் தேதி யோகா ஆசனத்தை செய்ய தொடங்கிய ரஞ்சனா, இன்று மதியம் 3 மணியளவில் தன்னுடைய ஆசானத்தை முடித்துள்ளார். தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். ரஞ்சனா உணவாக வெறும் பழ ரசத்தையை எடுத்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
-
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்!












Click it and Unblock the Notifications