For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவில்லை: அமைச்சர்

By Siva
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக ஆழ்துளை கிணறு அமைக்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி பெறவில்லை என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

விவசாய கிராமமான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

TNPCB didn't give permission for Hydro carbon project: Minister Karuppannan

இளைஞர்களும், மாணவர்களும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்து வருகிறார்கள். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காஞ்சீபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் திறந்து வைத்தார்.

கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய அவர் கூறுகையில்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக ஆழ்துளை கிணறு அமைக்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி பெறவில்லை என்றார்.

English summary
Minister of Environment KC Karuppannan said that ONGC has not got permission for Hydro carbon extraction project from Tamil Nadu Pollution Control Board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X