டிடிவி தினகரனை கைது செய்யுங்க... ஆட்சியை கலைங்க - டாக்டர் ராமதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்த புகாரில் டி.டி.வி.தினகரனை கைது செய்வதோடு, தமிழக அரசையும் கலைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

To dissolve the Tamil Nadu government - Dr.Ramadoss

ஆர்.கே.நகர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க தினகரன் முயன்றதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற லஞ்சம் வழங்க முயன்றுள்ளனர்.

இதுபோன்ற நடவடிக்கைகளை தினகரனின் தனிப்பட்ட செயல்பாடாக பார்க்க கூடாது , அவரது வழிகாட்டுதலில் நடைபெறும் தற்போதைய அரசின் செயல்பாடாகக் கருத வேண்டும்.

தங்களைக் காப்பற்றிக் கொள்ளவும், பதவியை தக்கவைக்கவும் உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்துக்கு லஞ்சம் கொடுக்க இவர்கள் தயங்க மாட்டார்கள்.

எனவே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனை கைது செய்வதோடு, தமிழக அரசையும் கலைக்க வேண்டும் என தமது அறிக்கையில் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dr. Ramadoss said that his statement, to dissolve the current assembly and to conduct fresh elections. Police immediatly arrest TTV Dinakaran in connection with bribe case.
Please Wait while comments are loading...