ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழக அரசியலை கலக்கும் தைரியமான பெண் தலைவர் தமிழிசை
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை சௌந்தரராஜன் ஆணாதிக்க அரசியலில் கலக்கி வருகிறார்.
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை சௌந்தரராஜன், ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக அரசியலை கலக்கும் தைரியமான பெண்களில் ஒருவர் ஆவார்.
பாஜக மாநில தலைவராக உள்ள தமிழிசைக்கு இன்று 57-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி அனந்தனின் மகளான இவர் பாஜக கட்சியின் மாநில தலைவராக உள்ளார். இந்த பதவிக்கு முன்னர் இவர் தேசிய செயலாளராக இருந்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற தமிழிசை, டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மகப்பேறு மருத்துவம் படித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
|
தைரியமான பெண்
அரசியல் என்றாலே ஆணாதிக்கம் இருந்து வரும் நிலையில் அதில் சிறப்பாக செயல்பட்டவர் ஜெயலலிதா. தனியொரு பெண்மணியாக தைரியமாக அத்தனை பிரச்சினைகளையும் கையாண்டார்.

ஒப்பற்ற பெண்
அதுபோல் தமிழிசையும் ஜெயலலிதா போல் சிறந்த தைரியமான பெண் ஆவார். அவர் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் ஒப்பற்ற பெண் தலைவராக நீடித்து வருகிறார். இன்று இவரது பிறந்த நாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
|
வாழ்த்த வயதில்லை
தனி பெண்மணியாக அனைத்து விமர்சனங்களையும் தாங்கிகொண்டும்... அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் கருத்தை தெரிவிக்கும் உங்கள் ஆற்றலை கண்டு நான் நித்தமும் பிரம்மிப்பேன்... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....
இவண்
சேலம் மாநகர் மாவட்ட இளைஞரணி
கொண்டலாம்பட்டி மண்டல்
|
மனமார்ந்த வாழ்த்துகள்
உங்க கொள்கைக்கு உடன்படவில்லை என்றாலும்...
ஒரு பெண்ணாக இருந்து, பல கேலி கிண்டல்களை புறந்தள்ளி, சரியோ தவறோ உங்க கட்சி எடுக்கும் முடிவில் நிலைபாட்டில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
|
தமிழிசைக்கு
இன்று இசைக்கும் நாளைக்கு தமிழுக்கும் பிறந்தநாள் என்றான் சலூன் கடையில் ஒரு பையன். தமிழிசைக்கும் இன்றுதான் பிறந்தநாள் என்றேன் நான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications