டி.ஆர்.பாலு vs வைத்தியலிங்கம்: ஸ்ரீபெரும்புதூரில் வெல்லப்போவது யார்?
Recommended Video

ஸ்ரீபெரும்புதூர்: சென்னையை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் திமுகவின் டி.ஆர்.பாலுவுக்கும் பாமகவின் வைத்தியலிங்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் திமுக முதன்மைச் செயலரான டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார்.
இதேபோல் அமமுக சார்பில் தாம்பரம் நாராயணன் போட்டியிடுகிறார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பில் எம்.ஸ்ரீதர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மகேந்திரன் போட்டியிடுகிறார்.

தொகுதி நிலவரம்
சென்னை மாநகரத்தை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதில் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர்(தனி), பல்லாவரம், தாம்பரம் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2004ம் ஆண்டு வரை தனித்தொகுதியாக இருந்த நிலையில 2009ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு பொதுதொகுதியாக மாற்றப்பட்டது. இங்கு 2009ம் ஆண்டு நிலவரப்படி மொத்தம் 1,201,237 வாக்காளர்கள் இருந்தனர்.
லோக்சபா தேர்தலில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.. இது மக்களின் கருத்து கணிப்பு!

வெற்றி பெற்றவர்கள்
1971 ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டு வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நடந்த தேர்தலில் திமுக ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. 2009ம் ஆண்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் மூர்த்தியைவிட, திமுக வேட்பாளர் டிஆர் பாலு சுமார் 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தல்
2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.என்.ராமசந்திரன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் கெஜத்ரட்சகனைவிட சுமார் ஒரு லட்த்துககும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனினும் இந்த முறை கூட்டணி கட்சியான பாமகவுக்கு இந்த தொகுதியை அதிமுக விட்டுக் கொடுத்துவிட்டது.

பாலு vs வைத்தி
2009ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளரான டி.ஆர்.பாலு இப்போதும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது.

டோல்கேட் பிரச்னை
தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், என இந்த தொகுதியில் உள்ள பகுதிகள் எல்லாமே தொழிற்சாலைகள் நிறைந்தவை ஆகும். இங்கு உள்ள தொழிற்சாலைகளில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வேலை பார்க்கிறார்கள். இங்கு உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம் ஆகும். இதேபோல் ஸ்ரீபெரும்புதூரை சுற்றியு இருக்கும் இயங்கும் சுங்கச்சவாடி அகற்றப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குடிநீர் பிரச்னை
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முக்கியமான மற்றொரு பிரச்னை என்றால் தண்ணீர் தான். குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இதேபோல் நெருக்கம் மிகுந்த சாலைகள் உள்ளதால் சாலை கட்டமைப்பு வசதி, ஸ்ரீபெரும்புதூரில் மேம்பலா வசதி, சுங்குவார் சத்திரத்தில் பேருந்து நிறுத்த வசதி உள்ளிட்டவை பல இடங்களில் நிறைய வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது.

வெற்றிக்கனி
இந்தத் தொகுதியும் இதுவரை திமுகவுக்கே சாதகமாக இருந்துள்ளது.. தொகுதி களநிலவரப்படி, பாமகவின் வைத்தியலிங்கம் மற்றும் திமுகவின் டிஆர் பாலு இடையே போட்டிகள் இருப்பதாக தெரிகிறது. எனினும் திமுக இங்கு 2014ம் ஆண்டு முன்பு நடந்த கடைசி 3 முறையும் திமுகவே வென்றுள்ளதால் இம்முறையும் இங்கு வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவுக்கு வெற்றிக்கனி கிடைக்குமா, அல்லது பாமகவின் மாங்கனிக்கு வெற்றி கிடைக்குமா என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications